வியாழன், 15 ஜூலை, 2010

பகல்கனவு .....................

வீதியில் கண்விழித்த
கல் ஒன்ரு
என் பார்வையில்
தைத்தது

என் இருவிழியும்
சுழலவில்லை
பார்வை நின்றது

தங்கமோ வைரமோ
என என்னுள்ளம்
பதைத்தது

வீதிவழி
நோட்டம் விட்டு
வீடுவரை
வந்துவிட்டேன்

கனவுப்பூக்களை
உதிர்த்துக்கொண்டே

விடிந்தது
நம்வாழ்க்கை
விழித்த
கல் ஒளியில்

என விழுந்து
கண்முழித்தேன்
விடியல் முடிந்து.

பக்கங்கள்

toolbar powered by Conduit