வெள்ளி, 16 ஜூலை, 2010

நட்பின் இடைவெளி ......................



ள்ளி பருவத்தில் உன்னுடன் 
கைகோர்த்து சென்றுயிருக்கிறேன் 
பண்டம் மாற்று முறை போல் 
நாம் மதிய உணவை மாற்றியிருக்கிறோம் 

இரவு கண் விழித்து 
நாம் வேலைகளை 
நீயும்,நானும் 
மாற்றி செய்துயிருக்கிறோம் 

கல்லூரி பருவத்தில் 
நாம் நட்பை,காதலாக 
கருதிய அனைவருக்கும் 
புரியவைத்தோம் 
நாம் இருவரும் நல்ல நண்பர்கள் 
மட்டுமே என்று 

கல்லூரி முடிந்து,விட்டுக்கு 
செல்லலும் பொழுதிலும் 
எனக்காக காத்து இருந்து,என்னை 
பாதுகாத்து என் தெருவில் 
விட்டு விட்டு சென்று இருக்கிறாய் ; 

முதல் முறையாக 
உன்னை என் அன்னைக்கு 
அறிமுகம் செய்த பொழுதில் கூட 
என் அன்னையின் கண்களியில் 
தெரிந்த கலக்கத்தை போக்கும் 
விதமாக கூறினேன் 

என் அன்னையிடம் 
"இவன் உனக்கு எப்பொழுதும் 
மருமகன் ஆக முடியாது" 
ஏன் என்றால் 
"இவன் எனக்கு நிச்சயக்கப்பட்டா 
நண்பன் " என்று 

உன்னுடன் உன் வண்டியில் 
அமர்ந்து வந்த பொழுது எல்லாம் 
வேகம் இல்லாமல் ; 
மற்றவர் கண்களுக்கு 
நாம் நண்பர்களாக 
தெரியும் விதத்தில் 
அழைத்து சென்றாய் என்னை 

இதோ ! 
இன்று என் திருமண நாள் 
உறவுகள் அனைத்தும் 
சந்தோஷத்தில் இருக்க ; 

மேடையில் 
நானும்,என் வாழக்கை துணையும் 
நிற்க , 

என்னை நோக்கி வந்தாய் 
என் துணையிடம் 
வாழத்துக்கள் கூறி 

புகைப்படத்திற்கு நின்றாய் ,அவனுடன் 

கோபம் கண்ணில்;மனதில் குழப்பம் 
இத்தனை நாள் இல்லாத 
இடைவெளி ! ஏன் இன்று ? 

நீ சென்ற பிறகு கூறினான் 
என் துணை 
உன் தோழன் அழுகிறான் என்று 

நாம் எடுத்து கொண்ட 
புகைப்படத்தில் 
நீ என்னை 
பார்க்க 
நான் உன்னை 
பார்க்க 

இது தான் 
நட்பின் இடைவெளியா ...........................? 

பக்கங்கள்

toolbar powered by Conduit